‘என்ன சத்தம் இந்த நேரம்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

118

ஒரு நாளில் நடக்கும் சம்பவம் என்ற அடையாளத்தோடு படங்கள் வெளிவருவது தற்போது தமிழ்சினிமாவில் அதிகரித்து வருகிறது.இந்தப்பட்டியலில் நிதின் சத்யா ஹீரோவாக நடிக்கும் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ படமும் லேட்டஸ்டாக சேர்ந்து இருக்கிறது.

ஒரு மிருகக்காட்சி சாலையை சுற்றிப்பார்க்க செல்லும் நான்கு மாணவிகள் வழி தெரியாமல் மாட்டிக்கொள்கிறார்கள். அங்கே வேலை பார்க்கும் பாதுகாவலரான நிதின் சத்யா அவர்களை எப்படி மீட்டு அனுப்பி வைக்கிறார் என்பதுதான் கதை.

இந்த கதையை இரண்டு மணி நேரம் சுவராஸ்யமான சம்பவமாக படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் குரு ரமேஷ். இவர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர்.

பல வெற்றிப்படங்களை இயக்கி இயக்குனராக மட்டும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ராஜா இந்த படத்தின் மூலம்நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் படத்தின் சிறப்பம்சமே ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண் குழந்தைகள் நடித்திருப்பதுதான் இந்த குழந்தைகளின் அப்பாவாகத்தான் இயக்குனர் ஜெயம் ராஜா நடித்திருக்கிறார் இந்தப்படத்துக்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.