சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த ‘பாண்டியநாடு’ படத்தை பார்த்த பலரும் குறிப்பாக வினியோகஸ்தர்கள் விஷால், லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் கலர்ஃபுல்லாகவும் அதேசமயம் உயிரோட்டமாகவும் இருக்கின்றன என பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். ‘பாண்டியநாடு’ படப்பிடிப்பின்போதே திக் ஃப்ரண்ட்ஸ் ஆகிவிட்டார்கள் விஷாலும் லட்சுமி மேனனும்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் இருவருக்கும் உதட்டு முத்தக்காட்சி ஒன்று இடம்பெறுகிறதாம். எந்தவித தயக்கமும் இல்லாமல் இயக்குனரிடம் சம்மதம் சொல்லிவிட்டாராம் லட்சுமி மேனன். நடிக்க மாட்டேன் என்று சொல்வதற்கு அவர் என்ன நஸ்ரியாவா?
எப்படியோ கெமிஸ்ட்ரி நல்லபடியாக ஒர்க் அவுட் ஆனால் சரி.. லட்சுமி மேனன் புத்திசாலி.. நஸ்ரியா மாதிரி பிரச்சனை பண்ணி தேவையில்லாத சிக்கலில் எல்லாம் மாட்டிக்கொள்ள மாட்டார் என்று நம்புவோம். தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர் என விஷாலை வைத்து இரண்டு படங்களை இயக்கிய விஷாலின் ஆஸ்தான இயக்குனரான திரு தான் இந்தப்படத்தையும் இயக்க இருக்கிறார். விஷாலே இந்தப்படத்தையும் தயாரிக்கிறார்.