சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள், தனுஷின் மனைவி என்பதையும் தாண்டி தமிழ்நாட்டிலும் தமிழ்சினிமாவிலும் தனக்கென ஒரு அடையாளம் ஏற்படுத்தும் ஐஸ்வர்யா தனுஷின் முயற்சி தான் அவர் எடுத்திருக்கும் இயக்குனர் அவதாரம். ‘3’ படத்தின் மூலம் தன்னை இயக்குனராக நிரூபித்தும் இருந்தார்.
தற்போது இரண்டாவதாக கௌதம் கார்த்திக்கை வைத்து ‘வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா. இன்று பிறந்தநாள் காணும் ஐஸ்வர்யாவுக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.