சுண்டாட்டம் படத்தில் ஹீரோவாக நடித்த இர்ஃபானை ஞாபகம் இருக்கிறதா? அந்தப்படத்தில் கேரம் பிளேயராக நடித்த இர்ஃபான் தற்போது ‘எதிர்வீச்சு’ என்ற படத்தில் நடிக்கிறார். ஆச்சர்யமாக இந்தப்படத்திலும் ஃபுட்பால் பிளேயராக ஒரு விளையாட்டு வீரர் வேடம்தான் அவருக்கு கிடைத்திருக்கிறது. கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த ரஸ்னா நடிக்க, இவர்களுடன் சின்னிஜெயந்த், நளினி, சிங்கமுத்து, வையாபுரி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இந்தப்படத்தின் கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் கே குணா. இவர் மௌனம்சம்மதம், ஏர்போர்ட், படிச்சபுள்ள போன்ற படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றி உள்ளார். இந்த படம் இண்டர்நேஷனல் கேம் ஃபுட்சால் (international game futsal ) என்கிற இண்டோர் ஃபுட்பால் (indoor foodball) விளையாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு தற்பொழுது உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இந்தப்படத்தில் இர்பான் மலேசிய ஃபுட்பால் வீரராக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மலேசியா மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்த படம் இந்தியாவில் ‘எதிர்வீச்சு’ என்ற பெயரிலும் வெளிநாடுகளில் ‘கோல்’ என்ற பெயரிலும் வெளியாக இருக்கிறது. விளையாட்டு கலையுடன் பொழுதுபோக்கு அம்சங்களையும் இணைத்து வெளிவரும் இந்தப்படம் மக்களுக்கு நிச்சயமாக மக்களை கவரும் என்கிறார் தயாரிப்பாளர் எஸ்.ராஷிக்.