ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாக அவதாரம் எடுக்கும்போது அவர்களது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து விடுகிறது. அந்தவகையில் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கிவரும் யான் படமும் சிறப்பு கவனம் பெற்றிருக்கிறது. ஜீவா, ‘கடல்’ துளசி நடிக்க ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகிவரும் இந்தப்படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தற்போது திருமணப்பாடல் ஒன்றை படமாக்கி வருகிறார்கள். அடுத்ததாக நட்பு பற்றிய பாடல் ஒன்றை மும்பையில் படமாக்க இருக்கிறார்கள். இந்தப்பாடலை மறைந்த காவியக்கவிஞர் வாலி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்பாடலை முடித்துவிட்டு இன்னும் சில பாடல்களுக்காக மொராக்கோ நாட்டிற்கு கிளம்ப இருக்கிறது யான் டீம். நவம்பர் இறுதிக்குள் படப்பிடிப்பு வேலைகளை முடித்துவிட்டு டிசம்பர் முதல் வாரத்தில் ஆடியோ ரிலீஸை நடத்த திட்டமிட்டுள்ளார் ரவி.கே.சந்திரன்.