ஹிட் பாடலிலிருந்து பிரபல வரியை படத்திற்கு தலைப்பாக வைப்பது தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. ஆனால் எந்த ஹிட் பாடலிலிருந்து எந்த வரியை தலைப்பாக தேர்வு செய்து வைப்பது பொருத்தமாக இருக்கும் என்பது பல இயக்குனர்களுக்கு இன்றுவரை சவாலாகவே உள்ளது.
அந்தவகையில் நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த நேரடி தமிழ் படத்திற்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்கும் இந்தப்படத்தை புதுமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். இவர் இயக்குனர் விஜய் மில்டனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தை திரு. பிரான்சிஸ் அவர்கள் தயாரிக்கவுள்ளார்.
இது ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. ரஹ்மான் சாரின் பெரிய ஹிட் பாடல் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பாடல் மனதிற்கு வந்ததாம் இயக்குனருக்கு. காதலையும் ரொமான்ஸையும் ஒரே வரியில் வர்ணிக்க இந்த வரியை விட பொருத்தமானது வேறெதுவும் இல்லை என இந்த டைட்டிலை வைத்துள்ளார்களாம்.
Comments are closed.