‘கயல்’ சந்திரனுக்கு நம்பிக்கை தரும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’..!

86

thittam pottu thirudura koottam

கயல் படத்தின் மூலம் அறிமுகமான சந்திரன், அடுத்தடுத்து ஒன்றிரண்டு படங்களில் நடித்தாலும் கூட, ஒரு நல்ல பிரேக் ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கிறார். அவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம் படம் இருக்கும்..

அறிமுக இயக்குநர் சுதரின் டைரக்சனில் உருவாகி வரும் இந்தப்படத்தில் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்க, நாயகியாக, சாட்னா டைடஸ், சுமார் மூஞ்சி டேனி, சாம்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார். கயல் சந்திரனின் சகோதரரே இந்தப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

இதன் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படம் இதுவரை வெளியான கிரிக்கெட் படங்களில் இருந்து முடிலும் மாறுபட்டதாக இருக்கும்… ஆம்.. கிரிக்கெட் கோப்பையை கொள்ளை அடிப்பதை கதைக்கருவாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Comments are closed.