ஹிருத்திக் ரோஷன் நடித்து ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான படம் கிரிஷ். இதன் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றியடைந்த சந்தோஷத்தில் ஹிருத்திக்கின் அப்பா ராகேஷ் ரோஷன் மூன்றாவ்து பாகத்தை 250 கோடி பட்ஜெட்டில் எடுத்து முடித்திருக்கிறார். முதல் இரண்டு பாகங்கள் தமிழில் டப் செய்து வெளியிட்டும் சரியாக போகவில்லை. ஆனால் இந்த முறை தமிழில் வெற்றி பெற்று விடவேண்டும் என்று முடிவெடுத்த ராகேஷ் ரோஷன் அதற்காக ஒரு தயாரிப்பு குழுவையே ஏற்படுத்திருக்கிறார். இந்த குழு தமிழில் பாடல்களை எழுத பாடலாசிரியர் அண்ணாமலையையும், குரல் கொடுக்க பிரபல நடிகர்களையும் ஏற்பாடு செய்திருக்கிறது. இது வரை வேறு எந்த இந்தி படங்களும் ரிலிஸாகத வகையில் உலகம் முழுதும் 4 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகப் போகிறது கிரிஷ்-3.