தற்போது ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் சேரன். இந்த பரபரப்பான நேரத்திலும் கூட மாணவர்களின் கற்பனைத்திறனையும் சிந்தனையையும் ஊக்குவிக்கும் விதமாக புதிய நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறார் சேரன். கல்லூரி மாணவர்கள் வருடத்தில் ஐந்து நாட்கள் மட்டும் கலை நிகழ்ச்சிக்காக நேரம் ஒதுக்கி தங்களுக்குள் உள்ள திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே ஒரு மாதிரி வடிவம் கொண்ட பாடல்களை தங்களது திறமைக்கு மாற்றியமைக்கும் மாணவர்களிடம் புதிய முயற்சியாக, எந்த மாதிரி வடிவமும் கொடுக்காமல் அவர்களை அவர்களாகவே அடையாளம் காண முயலும் நேரம் இது என்கிறார் சேரன்.
இதன் மூலம் அவர்கள் மனதில் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரமுடியும் என்று நம்பும் சேரன் ஒவ்வொரு கல்லூரி முதல்வர்களின் உதவியோடு இந்த திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்க இருக்கிறார். சமூகத்தில் நிறைய மாற்றங்கள் அவசியம் என்றும் தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதும் தான் சேரன் இதனை ஆரம்பிக்கும் நோக்கமாகும்.