மனிதனாக அவதரித்து மகான் ஆன சீரடி சாய்பாபாவின் வாழ்கையில் நடந்த சம்பவங்கள் திரைக்கதையாக்கப்பட்டு “சீரடி ஜெய் சாய்ராம்” என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பாபாவின் வாழ்கையை பதிவு செய்தவர்கள் சொல்லாமல் விட்ட சில சம்பவங்கள் இந்த படத்தில் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சீரடி சாய்பாபாவாக தாத்தா ரெட்டி என்பவர் நடிக்கிறார். திரைக்கதை அமைத்து ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் பாஸ்கர்பாபா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. “எனது வாழ்க்கை லட்சியமாக பாபா பற்றிய படம் எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த லட்சியம் நிறைவேறி விட்டது” என்கிறார் பாஸ்கர்பாபா பக்தியுடன்.