சென்னையை அடுத்த முகப்பேரில் உள்ள ஸ்ரீகனகதுர்கா கோயிலில் நடந்த உண்மை சம்பவம் “மேற்கு முகப்பேர் ஸ்ரீகனக துர்கா” என்ற பெயரில் படமாகியுள்ளது. இந்த படத்தில் புதுமுகங்கள் மகி,சரவணன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, திவ்யா நாகேஷ், ஜான்விகா இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் டி.பி.கஜேந்திரன் மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி ஜெயபால் சுவாமி தயாரிக்க, இந்தப்படத்தை சந்திர கண்ணையன் என்பவர் இயக்குகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தேனிசை தென்றல் தேவா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் டெல்லி கணேஷ் பாடும் “சிலை என்று யார் சொன்னது?என்ற பாடல் காட்சியின் போது கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் அந்தப்பாடலை கேட்டு மெய்சிலிர்த்து போனார்களாம். சென்னை மற்றும் கொடைக்கானல், மூணார் போன்ற இடங்களில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.