சிம்புவுடன் சேர்ந்துகொண்டு நகைச்சுவை நடிகராக வலம் வரும் தயாரிப்பாளர் வி.டி.வி.கணேஷ், இப்போது ‘இங்க என்ன சொல்லுது’ங்கிறபடத்தை தயாரித்து ஹீரோவாகவும் நடித்து வருகிறார். வின்சென்ட் செல்வா இயக்கும் இந்தப்படத்தில், வி.டி.வி.கணேஷுக்கு ஜோடியா மீரா ஜாஸ்மின் நடிக்கிறார்.. 45 வயதுக்குப் பின் கல்யாணம் செய்துகொள்ளும் ஒருவனின் கலாட்டாதான் இந்தப்படத்தின் கதை.
நடிகர்களை பாடவைக்கிற ட்ரெண்டில் வி.டி.வி.கணேஷை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன?. இந்தப்படத்தின் இசையமைப்பாளர் தரண்குமார், படத்தில் வி.டி.வி.கணேஷை ஒரு பாடலையும் பாடவைத்திருக்கிறார். “கணேஷுக்கு இருக்கும் குரலே வித்தியாசமானது.. தனித்துவமானது.. அவரை வேறு ஏதோ ஒரு படத்திற்காக பாடவைத்தால் அது படத்தோடு ஒட்டாமல் தான் நிற்கும். ஆனால் இந்தப்படத்தில் அவர் கதைநாயகனாக நடிப்பதால் அவருக்கான பாடலை அவரே பாடுவதாகத்தான் அமைந்திருக்கிறது இந்தப்பாடல். அதனால் வித்தியாசமாக எதுவும் தெரியாது” என்கிறார் தரண்குமார்.
இந்தப்படத்தில் முக்கியமான கேரக்டர்களில் வி.டி.வி.கணேஷின் நெருங்கிய நண்பர்களான சிம்புவும் சந்தானமும் நடிக்கிறார்கள். அத்துடன்”குட்டி பயலே… குட்டி பயலே” எனத் தொடங்கும் ஒரு பாடலை தானே எழுதி பாடவும் செய்திருக்கிறார் சிம்பு. இந்தப்படத்துல சிம்புவுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.