பிரபுதேவா டைரக்ஷனில் இந்தியில் உருவாகியிருக்கும் ‘ஆர்.ராஜ்குமார்’ படம் டிசம்பர் 6ஆம் தேதி ரிலீஸாக தயாராக உள்ளது. ஷாகித் கபூர், சோனாக்ஷி சின்ஹா ஜோடியாக நடித்துள்ள இந்தப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட ‘ராம்போ ராஜ்குமார்’ என்ற பெயரை மாற்றி ‘ஆர்.ராஜ்குமார்’ என வைத்துள்ளார் பிரபுதேவா. இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டதில் பிரபுதேவாவுக்கு ரொம்பவே வருத்தம் தான்.
ஹாலிவுட்டில் இருந்து பெயரை மாற்றச்சொல்லி நெருக்கடி வரும் என அவர் உட்பட யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்தான். காரணம் நம்மவர்கள் தான் ஹாலிவுட் படங்களை ரைட்ஸே வாங்காமல் காப்பியடிப்பதையும், அங்கே ஹிட்டான படங்களின் பெயரையோ அல்லது கேரக்டர்களின் பெயரையோ இங்கே டைட்டிலாக வைப்பதையும் சாதாரணமாக செய்துவருகிறார்களே.. அப்படித்தான் இந்த டைட்டிலையும் முதலில் வைத்தார் பிரபுதேவா.
ஆனால் ஹாலிவுட் சூப்பர்ஸ்டாரான சிலவஸ்டர் ஸ்டாலன் நடித்த சூப்பர்ஹிட் படமான ‘ராம்போ’வின் பெயரை பயன்படுத்துவதற்கு அந்தப்படங்களின் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்தான் ‘ஆர்.ராஜ்குமார்’ என பெயரை மாற்றினார் பிரபுதேவா. படத்தில் வரும் ஷாகித்தின் கேரக்டர் பெயரும் இதுதான் என்பதால் அதையும் மாற்றியுள்ளாராம். அது என்ன என்பது படம் ரிலீஸாகும்போதுதான் தெரியுமாம்.
சமீபத்தில் ஒர் டி.வி.சேனலில் ஓடிக்கொண்டிருந்த சில்வஸ்டர் ஸ்டாலன் படம் ஒன்றை பார்த்துக்கொண்டிருந்த ஷாகித் கபூரிடம் அதை மாற்றும்படி கூறியதோடு, ஷாகித் அமெரிக்கா போனால் ஸ்டாலனை சந்திக்கவும் கூடாது என்று சொன்னார் என்றால், எந்த அளவுக்கு இதில் பிரபுதேவா வருத்தமடைந்துள்ளார் என பார்த்துக்கொள்ளுங்களேன்.