விஜய்சேதுபதி நடித்த ‘ரம்மி’யின் ரிலீஸ் தேதியை டிசம்பர்-27ல் இருந்து ஜனவரி-24க்கு மாற்றி வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே விஜய்சேதுபதி நடிக்கும் படங்கள் எல்லாமே வெற்றிவாகை சூடிவருகின்றன. அந்தவகையில் ‘ரம்மி’ படத்திற்கு அவரது முந்தைய படங்களைவிட எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
வரும் 27ம் தேதி இந்தப்படத்தை வெளியிட்டால் அடுத்த 15 நாட்களில் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் படங்கள் காரணமாக குறுகிய காலத்திற்கு தான் திரையிட முடியும். அதற்காக நன்றாக ஓடுகின்ற படத்தை தூக்குவதும், ஒரு நல்ல படம் குறைந்த நாட்கள் ஓடுவதும் ஆரோக்கியமான விஷயம் அல்ல. அதனால் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ரம்மி’ பட வெளியீட்டை கொஞ்சம் தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதையொட்டியே, படத்தை ஜனவரி 24ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியிட எஸ்.கே.கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது. படம் தாமதமாய் வந்தால் தான் என்ன, விஜய் சேதுபதியின் வெற்றி என்பது எப்போதோ உறுதி செய்யப்பட்ட ஒன்று தானே.