‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா, தற்போது தனது நண்பர்கள் உதவியுடன் ‘நெடுஞ்சாலை’ என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப்படத்தில் ஆரி, ஷிவதா இருவரும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். ‘எங்கேயும் எப்போதும்’ சத்யா இசை அமைத்துள்ளார்.
‘பைன் போக்கஸ்’ படநிறுவனம் சார்பாக ஆஜு மற்றும் சௌந்தர் ராஜன் தயாரிப்பில், ‘இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் இயக்குனரை வெகுவாக பாராட்டியதுடன் படத்தை மொத்தமாக வாங்கி தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடுகிறார். இதனால் சாதாரணமாக தயாராகியிருந்த இந்தப்படம் கவனிக்கத்தக்கதாக மாறியிருக்கிறது.