வரும் டிசம்பர் 15ஆம் தேதி, வெறுமனே சாதாரண ஒரு ஞாயிற்றுக்கிழமையாக மட்டும் கடந்து போகப்போவதில்லை. காரணம் அன்றுதான் இளைய தளபதி விஜய் நடித்துவரும் ‘ஜில்லா’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்த தீர்மானித்திருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.
ஆனால் அதில் ஒரு சின்ன மாற்றமாக இந்த இசைவெளியீட்டை எளிமையாக நடத்த முடிவு செய்திருக்கிறார்களாம். காரணம் விஜய்யின் முந்தைய படமான ‘தலைவா’ படத்தின் இசைவெளியீட்டின்போது சிலர் பேசிய வார்த்தைகள்தான் தேவையில்லாத சில பிரச்சனைகளுக்கு அப்போது வாசலை திறந்து விட்டதாம்.
அதனால் ‘ஜில்லா’வின் இசை வெளியீட்டை சிம்பிளாக முடித்துவிட்டு அன்றைய தினமே கடைகளிலும் ஆடியோ விற்பனையை ஆரம்பித்துவிடலாம் என முடிவும் செய்திருக்கிறார்களாம். தற்போது ‘ஜில்லா’ படத்தின் ஓப்பனிங் பாடலை பொள்ளாச்சியில் படமாக்கி வருகிறார்கள். வசனப்பகுதிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு டப்பிங்கும் பேசி முடிக்கப்பட்டு விட்ட நிலையில் பொங்கல் ரிலீஸுக்காக விறுவிறுப்பாக தயாராகி வருகிறது ‘ஜில்லா’.