டான்ஸில் பட்டையை கிளப்பும் சந்தானம்

70

மாதத்திற்கு இரண்டு படங்களாவது சந்தானம் காமெடி இல்லாமல் வெளியாவது இல்லை என்ற சூழ்நிலை தமிழ் சினிமாவில் உருவாகி வெகு நாட்களாகி விட்டது. இன்னொரு பக்கம் ‘வாலிப ராஜா’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என ஹீரோவாகவும் நடித்துக்கொண்டு இருக்கிறார் சந்தானம். ஹீரோ என்றால் டான்ஸ் இல்லாமலா? ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்திற்காக வித்தியாசமான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களை பிராக்டீஸ் செய்து வருகிறார் சந்தானம்.

ஏற்கனவே ஹீரோக்களின் நண்பனாக நடித்துவரும் சந்தானம் அவர்களுடன் சேர்ந்து அவ்வப்போது நடனமும் ஆடியிருக்கிறார். இதில் ஒருபடி மேலேபோய் ‘ராஜாராணி’ படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து ஆடும் பாடலில் ஜூனியர் என்.டி.ஆர் ஆடும் கஷ்டமான மூவ்மெண்ட்டுகளைக்கூட அசால்ட்டாக செய்து அசத்தியிருக்கிறார் சந்தானம். அதுமட்டுமல்ல தற்போது தனது நண்பரான வி.டிவி.கணேஷ் தயாரித்து ஹீரோவாக நடித்துவரும் ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் ‘அப்பாடக்கர்’ என்ற பாடலில் அதிரடி ஆட்டம் போட்டிருக்கிறாராம் சந்தானம்.

இது பற்றி வி.டி.வி.கணேஷ் சொல்லும்போது, “ராபர்ட் மாஸ்டர் நடன அமைப்பில் ‘அப்பாடக்கர்’ பாடலில் சூப்பராக ஆடியிருக்கிறார் சந்தானம். தரண் இசையில் பிரபல மலேசியன் ராப் பாடகர் ராபிட் மேக் பாடியுள்ள இந்தப்பாடலை நான்கு நாட்களில் படமாக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் சந்தானமும் ஒளிப்பதிவாளர் ராஜசேகரும் சேர்ந்து இந்தப்பாடலை இரண்டே நாட்களில் முடித்துக்கொடுத்து மீதி இரண்டு நாட்கள் தயாரிப்பு செலவை மிச்சப்படுத்திவிட்டார்கள். அந்த அளவுக்கு சந்தானம் டான்ஸில் பிக்கப் செய்து வருகிறார்” என்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.