உலக பிரசித்தி பெற்ற மார்வெல் காமிக்ஸ் புத்தகத்தில் வெளிவந்த தொடர் தான் ‘கேப்டன் அமெரிக்கா’. இதன் முதல் பதிப்பு 1941 ஆம் வெளியிடப்பட்டது. தற்போது உலகமெங்கும் ‘கேப்டன் அமெரிக்கா-தி விண்டர் சோல்ஜர் என்கிற பெயரில் திரைப்படமாக வெளிவர இருக்கிறது
நியூ யார்க் நகரில் நடக்கும் பேரழிவுக்கு பிறகு ஸ்டீவ் ரோகேர்ஸ் அமைதியான முறையில் வாஷிங்டன் நகரில் வசித்து வந்து நவீன உலகிற்கு பழகி வருகிறார். தன்னுடைய சகாவுக்கு ஒரு ஆபத்து ஏற்படும்போது, அவரை காக்க ஸ்டீவ் முற்படும் போது, பிரபஞ்சத்துக்கு ஏற்பட இருக்கும் ஒரு பேரழிவு ஆபத்தை எதிர் நோக்குகிறார்.
தனக்கு எதிரான சதிகளை முறியடித்து, தன்னை ஒடுக்க வரும் ஆதிக்க சக்திகளை எதிர்க்க ப்ளாக் விடோ மற்றும் பால்கன் உடன் இணைந்து போராட ஆரம்பிக்கிறார். அப்போதுதான் அவருக்கு தெரிய வருகிறது தான் இப்போது போராடப் போவது – தி விண்டர் சோல்ஜர் என்கிற மாபெரும் அழிவு சக்தி கொண்ட எதிரி என்பது. இதை ஸ்டீவ் ரோகேர்ஸ் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை.
கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரல் 4ஆம் தேதி அமெரிக்காவில் வெளியாகும் அதே நாளில் இங்கே தமிழகத்திலும் ‘எதற்கும் அஞ்சாதவன்’ என்ற பெயரில் வெளியாகிறது. மேலும் தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு ஆகிய மற்ற பிராந்திய மொழிகளிலும் வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை முறியடிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது .