2010ல் ‘இரும்பிக்கோட்டை முரட்டு சிங்கம்’ வெளியாகி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து சிம்புதேவன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் தான் ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ இந்தப்படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடிக்க, பிந்துமாதவி மற்றும் ‘உதயம் என்.எச்-4 படத்தில் நடித்த அர்ஷிதா ஷெட்டியும் நாயகிகளாகவும் நடித்துள்ளார்.
நாசர், ‘ஆடுகளம்’ நரேன், ஜெயபிரகாஷ், இளவரசு ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். இதுதவிர நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ‘பக்ஸ்’முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் பிப்-28 ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாகிறது. காதலும் காமெடியும் கலந்த படமாக இதை உருவாக்கியுள்ள சிம்புதேவன் “இந்தப்படம் எனக்கு நிச்சயம் ஒரு ப்ரேக் கொடுக்கும்” என்கிறார் உறுதியாக.