சுசீந்திரன் ’பாண்டிய நாடு’ படத்தின் 72 நாள் படப்பிடிப்பை முடித்து திரும்பியிருக்கிறார். அவரிடம் படப்பிடிப்பின் அனுபவம் பற்றி கேட்டபோது,
”பாரதிராஜா 35 நாள் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துக் கொடுத்தார். பெரிய இயக்குனர் என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் நடித்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ‘நீ நினைச்சது வந்திடுச்சா..இன்னொரு டேக் போலாமா..’ என்று கேட்டு நடித்தார். கிட்டதட்ட முழு படமும் முடிந்து விட்டதென்றே சொல்லலாம்.” என்றார் சுசீந்திரன்