‘ஆரம்பம்’ – ‘தல’ தீபாவளி

33

படத்திற்கு தலைப்பு வைப்பதிலிருந்து எல்லா விஷயத்திலும் ‘ஆரம்ப’த்திலிருந்தே ஒரு சஸ்பென்ஸை கடைபிடித்துவருகிறது ‘ஆரம்பம்‘ டீம். பில்லாவுக்குப்பின் அஜீத்தும் விஷ்ணுவர்தனும் இணையும் படம் என்பதால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிக்கிடக்கிறது.

அடுத்ததாக ஆடியோ ரிலீஸே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் குழம்பிக் கிடக்க, படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ‘ஆரம்பம்’ தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் விரைவில் படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவிப்பதாகவும் ஏ.எம்.ரத்னம் அறிவித்துள்ளார். பில்லாவிலும் மங்காத்தாவிலும் தனது பாடல்களால் மட்டுமல்ல, வித்தியாசமான் பின்னணி இசையாலும் ஒரு புதிய அஜீத்தை அவரது ரசிகர்களுக்கு காட்டிய யுவன் சங்கர் ராஜா இதிலும் மிரட்டியிருக்கிறார் என்றும் படத்தின் பாடல்கள் மிகவும் பேசப்படும் என்றும் கூறியுள்ளார் ஏ.எம்.ரத்னம்.

Leave A Reply

Your email address will not be published.