ஹாலிவுட் படங்களின் அதிரடி ஆக்ஷன் ஹீரோவான வின் டீசல் நடித்த ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தின் ஆறாம் பாகம் மூன்று மாதங்களுக்கு முன் தான் வெளியாகி பட்டையை கிளப்பியது. தற்போது வின் டீசல் நடித்துள்ள ‘ரித்திக்’ படமும் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. ஏற்கனவே பிட்ச் பிளாக், தி க்ரோனிக்கல்ஸ் ஆஃப் ரித்திக் என இரண்டு பாகங்கள் வெளியாகிவிட்ட நிலையில் இந்த ‘ரித்திக்’ அதன் மூன்றாம் பாகமாக உருவாகியிருக்கிறது.
முதல் இரண்டு பாகங்களையும் இயக்கிய டேவிட் ட்டூஹி தான் இந்தப்படத்தையும் இயக்கியுள்ளார். விஞ்ஞானம் கலந்த த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் ஏலியன்களிடம் இருந்து தனது கிரகத்தை காப்பாற்ற போராடும் வீரராக வின் டீசல் நடித்துள்ளார்.
2006ஆம் வருஷமே மூன்றாம் பாகமான இந்த ‘ரித்திக்’கை தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் 2012ல் தான் இதன் படப்பிடிப்பே ஆரம்பிக்கப்பட்டது. படத்தின் ஹீரோ வின் டீசலே தயாரிப்பளர்களில் ஒருவராகவும் மாறி இந்தப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப்படத்தை வாங்கியுள்ள யுனிவர்ஷல் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை செப்டம்பர் 6ஆம் தேதி வெளியிடுகிறது. வின் டீசலின் ரசிகர்களுக்கு செமத்தியான விருந்து காத்திருக்கிறது.