தற்போது விக்ரம் பிரபு ஒரே சமயத்தில் ‘சிகரம் தொடு’, ‘அரிமா நம்பி’ உட்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனரான ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரிமா நம்பி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.. சூட்டோடு சூடாக இன்றுமுதல் படத்தின் டப்பிங் பணியையும் ஆரம்பித்துவிட்டார்கள்.
கும்கி, இவன் வேற மாதிரி படங்களில் வித்தியாசமாக தன்னை வெளிப்படுத்திய விக்ரம் பிரபுவுக்கு இந்தப்படத்திலும் அசத்தலான கேர்க்டர் என்கிறார்கள். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்து வருகிறார்.
ட்ரம்ஸ் சிவமணி முதன்முறையாக இசையமைத்துவரும் இந்தப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை மார்ச் மாதல் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.