டெல்லி பாதுஷாவின் மகளாக நடிக்கும் ஸ்ரேயா..!

189

அனுஷ்கா சரித்திரப்படங்களில் நடிக்கிறார். நயன்தாரா புராணப்படங்களில் நடிக்கிறார். அப்ப ஸ்ரேயாவுக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா என்ன?. ஏற்கனவே ‘சந்திரா’ படத்தில் மகாராணி சந்திராவதியாக நடித்த ஸ்ரேயா, இப்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு தமிழில் ‘ஸ்ரீ ராமானுஜர்’ என்ற புராணப்படத்தில் நடிக்கிறார்.

ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் இந்தப்படத்தில் டெல்லியை ஆண்ட பாதுஷாவின் மகளான பீவி நாச்சியார் வேடத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, டெல்லிகணேஷ், ஸ்ரீமன் என ஒரு அனுபவம் வாய்ந்த நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடிக்கிறார்கள்.

கவிஞர் வாலியின் பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா. இசையமைக்க, இந்தப்படத்தை இயக்குகிறார் ரவி.வி சந்தர். இந்தப்படத்திற்காக தற்போது ஏவி.எம்.ஸ்டுடியோவில் பிரம்மாணட அரங்குகள் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.