ஏ.ஆர்.ரஹ்மான் ‘யோதா’ என்ற ஒரே ஒரு மலையாளப்படத்திற்கு மட்டும்தான் இசையமைத்திருக்கிறார். 1992ல் வெளியான இந்தப்படத்தில் மோகன்லால், மதுபாலா நடிக்க, சங்கீத்சிவன் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். அப்போதுதான் தமிழில் ரோஜா படத்திற்கு இசையமைத்ததின் மூலம் பிரபலமாகியிருந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மலையாளத்தில் இருந்து மோகன்லால் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு வரவே அதை உடனே ஏற்றுக்கொண்டார். ஆனால் அதன்பின் இந்த 21வருடங்களில் மற்றொரு மலையாள படத்துக்கு அவர் இதுவரை இசையமைக்கவே இல்லை.
ரஹ்மானை தொடர்ந்து அவரது தங்கை ஏ.ஆர்.ரெஹைனாவும் தற்போது தமிழ் சினிமாவில் சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழில் மட்டுமே இசையமைத்து வந்த ரெஹைனா, இப்போது முதன்முதலாக ‘வசந்தத்திண்டே கானல் வழிகள்’ என்ற படத்திற்கு இசையமைப்பதின் மூலம் மலையாளத்திலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். வி.என்.அனில் என்பவர் இயக்கும் இந்தப்படம் கேரள அரசியல் தலைவர்களின் வரலாறு பற்றிய கதையாக உருவாகிறதாம். இந்தப்படத்தில் டைரக்டர் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.