’தெனாலிராமன்’ பற்றி எந்த தகவலும் இல்லையே என்று வடிவேலுவிடம் பேசினோம். ”ஹலோ….அண்ணே கேட்கல சிக்னல் இல்லண்ணே..” என்று அநியாயத்துக்கு கத்தி பேசினார். “ இப்ப கேக்குதுண்ணே, குற்றாலத்துல இருக்கேன். படம் நல்லா வந்திருக்கு. இன்னும் கொஞ்சம் தான் சூட் பண்ண வேண்டியிருக்கு. அதெல்லாம் முடிஞ்சதும் ஒரே மூச்சா போட்டோ தர்றேன். இப்ப வர்ற படங்கள்ல காமெடி போதலண்ணே. படம் மனசை ரிலாக்ஸ் பண்ண வைக்கனும். அதை விட்டுட்டு படம் பார்க்க வர்றவய்ங்கள மன உளைச்சலுக்கு ஆளாக்கக் கூடாது. தெனாலிராமன் நான் நினைச்சபடி நல்லா வந்திருக்குண்ணே. சென்னைக்கு வந்ததும் சந்திக்கலாம்.” என்று அவர் ஸ்டைலில் சிரித்து போனை வைத்தார் வடிவேலு.