சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் அதிக அளவு ரசிகர்களை பெற்றிருப்பவர்களில் முக்கியமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். நேரம் கிடைக்கும்போது ரசிகர்களுக்கு தான் சொல்லவிரும்பும் விஷயங்களை இந்த தளங்களில் எழுதுவார் ரஹ்மான். காரணம் தனது ரசிகர்களுடன் இந்த வழியிலாவது நேரடி தொடர்பில் இருக்க விரும்புகிறார். தனது மகள் கதீஜா ப்ளஸ் டூவில் 94 சதவீத மதிப்பெண்கள் பெற்றதை அவ்வளவு பூரிப்புடன் குறிப்பிட்டிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஆனால் ஃபேஸ்புக்கிலோ ட்விட்டரிலோ தனது சினிமா தொடர்பான விஷயங்களை ஏ.ஆர்.ரஹ்மான் மறந்தும்கூட குறிப்பிட விரும்புவது இல்லை. அதேபோல கருத்து சொல்கிறேன் என்கிற பெயரில் தேவையில்லாமல் பிரச்சனைக்கு திரி கொளுத்திப்போடும் வேலையும் அவருக்கு பிடிக்காத ஒன்று. “என்மனதில் தோன்றும் விஷயங்களை ஒரு சராசரி மனிதனாக மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவே நான் விரும்புகிறேன்” என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.