மலையாளத்தில் வெளியான ‘காக்டெயில்’தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. சரி.. விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கிய பரதன் இப்போது என்ன செய்கிறார்?. இரண்டு செய்திகளுக்கும் சம்பந்தம் இல்லையே என குழம்பவேண்டாம்.. மேலேதான் இதற்கான பதிலையே கொடுத்துவிட்டோமே. ஆமாங்க.. காக்டெயில் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் பரதன். மலையாளத்தில் அருண்குமார் என்ற எடிட்டர் முதன்முறையாக இயக்கிய இந்தப்படம் கேரளாவில் சூப்பர்ஹிட் ஆனது.
இந்த தமிழ் ரீமேக்கில் கதாநாயகியாக அனன்யா நடிக்கிறார். காக்டெயில் படத்தில் சம்விருதா சுனில்(தமிழில் உயிர் படத்தில் ஸ்ரீகாந்தின் ஜோடியாக நடித்தவர்) நடித்த கேரக்டரில்தான் அனன்யா நடிக்கிறார். கதாநாயகர்களாக சீனு மற்றும் நிகேஷன் என்ற இரண்டுபேர் நடிக்கிறார்கள்.
இதுதவிர சிறப்புத்தோற்றத்தில் நடிக்க சில முன்னணி நடிகர்களிடமும் பேசிவரும் இயக்குனர் பரதன், தமிழுக்கு ஏற்ற மாதிரி இந்தப்படத்தில் சில மாற்றங்களை செய்திருக்கிறாராம். படத்தின் டைட்டிலும் இசையமைப்பாளர் யார் என்பதும் விரைவில் அறிவிக்கப்படுமாம்.