அனுஷ்காவைத் தேடிவரும் சரித்திர வேடங்கள்

42

சரித்திரப் படங்களுக்கும் அனுஷ்காவுக்கும் அப்படி என்ன ராசியோ தெரியவில்லை.., தொடர்ந்து சரித்திரப்படங்களாக அவரைத் தேடி வருகின்றன. ஏற்கனவே. தெலுங்கில் குணசேகர் டைரக்ஷனில் ‘ராணி ருத்ரமாதேவி’ என்ற படத்திலும் எஸ்.எஸ்.ராஜமௌலி டைரக்ஷனில்‘பாஹுபாலி’ என்ற சரித்திர படத்திலும் நடித்து வருகிறார் அனுஷ்கா.

இப்போது இன்னொரு சரித்திரப்பட வாய்ப்பும் அவரைத்தேடி வந்திருக்கிறது. அஷோக் என்பவர் இயக்கும் படத்தில் 16ஆம் நூற்றாண்டில் கோல்கொண்டா ராஜ்யத்தை ஆண்ட முகமது ஹூலி ஹுதுப் ஷா என்ற முஸ்லீம் சுல்தானின் மனைவியாக, பாஹ்மதி என்ற கேரக்டரில் நடிக்கிறார் அனுஷ்கா. பாஹுபாலி படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபாஸ் தான் இந்தப்படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.