சன் பிக்சர்ஸ் ஒரு படத்தை வெளியிடுகிறது என்றால் அந்தப்படத்திற்கான எதிர்பார்ப்பு இரு மடங்கு ஆகிவிடுவது வழக்கம் தான். ஆனால் சமீபகாலமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் படம் எதையும் வெளியிடாமல் ஒதுங்கியிருந்தது. தற்போது வி.டி.வி.கணேஷ் நடித்துள்ள ‘இங்க என்ன சொல்லுது’ படத்தை வெளியிடுவதன் மூலம் மீண்டும் களத்தில் குதித்துள்ளது.
இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை நேற்று சூரியன் எஃப்.எம்மில் நடத்தியது சன் பிக்சர்ஸ். வின்செண்ட் செல்வா நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்கியுள்ள இந்தப்படத்தில் வி.டி.வி.கணேஷ் ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார். இவர்களுடன் சிம்பு, சந்தானம், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.