
வெற்றிமாறன் தற்போது புதிய முயற்சியாக ‘விசாரணை’ என்ற 6௦ நிமிட படம் ஒன்றை இயக்கிவருகிறார். அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்துவிட்டது.. ‘ஆடுகளம்’ படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் தினேஷை அறிமுகப்படுத்தியவரும் வெற்றிமாறன் தான்.
இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ‘பொறியாளன்’ படத்தில் நடித்துள்ள ஆனந்தியை (ரக்சிதா) கேட்டுள்ளார்கள். அப்படி அவர் சம்மதிக்கும் பட்சத்தில் இரண்டாவதுகட்ட படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார் என தெரிகிறது. தமிழில் பிரபு சாலமன் இயக்கியுள்ள ‘கயல்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளவர்தான் இந்த ஆனந்தி.
Comments are closed.