கே.வி.ஆனந்த் தன்னுடைய படத்தில் நடிக்கும் ஹீரோக்களைப்போல ஹீரோயின்களுக்கும் சம முக்கியத்துவம் கொடுப்பார். கோபிகா, தமன்னா, காஜல் அகர்வால் முதல் கோ படத்தில் அறிமுகமான கார்த்திகா வரை அவரது படங்களில் நடித்தவர்களுக்கு ஹீரோவுக்கு சமமான கேரக்டரை கொடுத்திருப்பார்.
அந்த வகையில் இந்தமுறை தனுஷை வைத்து தான் இயக்கும் அனேகன் படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகை அமிரா டஸ்டருக்கு சண்டக்காட்சிகளில் தூள் கிளப்பும் வேடத்தை கொடுத்திருக்கிறார். சமீபத்தில் இந்தப்படத்திற்கான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது அதில் டூப் போடாமல் தானே துணிந்து நடித்திருக்கிறார் அமிரா. இந்த காட்சியில் நடிப்பதற்காக கிட்டத்தட்ட ஒருமாதம் வரை பயிற்சியாளர்களிடம் முறைப்படி பயிற்சி எடுத்துக்கொண்டாராம் அமிரா.
அதுமட்டுமல்ல இந்த சண்டைக்காட்சி இண்டர்நேஷனல் லெவலுக்கு எடுக்கப்பட இருக்கிறது என்பதால் முன்கூட்டியே ஹாலிவுட் படங்களான சார்லீஸ் ஏஞ்சல்ஸ், சில்வர் ஹாக் போன்ற ஹீரோயினிச படங்களாக தேடித்தேடிப் பார்த்து தன்னை தயார்படுத்திக் கொண்டாராம் அமிரா. இதுவரை உடலை வருத்தி இதுபோன்ற காட்சிகளில் நடித்திராத அமிராவுக்கு, எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி நன்றாக வந்திருப்பதில் அளவு கடந்த மகிழ்ச்சியாம்.