ஆலமரம் – விமர்சனம்

99

 

கிராமத்து எல்லையில் உள்ள ஆலமரத்தில் செத்துப்போன கருத்தப்பாண்டி இருப்பதாக நினைக்கும் ஊர் மக்கள் அந்தப்பக்கம் போவதில்லை. அந்த ஊருக்கு திருமண தடையை நிவர்த்தி செய்யவருகிறார் அவந்திகா. அவர்மீது கண்டதும் காதல் வருகிறது உள்ளூரில் இருக்கும் ஹேமந்திற்கு.

ஆனால் அவந்திகாவை திருமணம் செய்ய அவரது வளர்ப்பு மாமன் மற்றும் அந்த ஊர் தாதாக்கள் இரண்டுபேர் வரிசையில் நிற்கின்றனர். இதையும் மீறி இவர்கள் காதலுக்கு அந்த ஆலமரமும் ஹேமந்தின் நண்பன் சடையனும் உதவுகிறார்கள்.. இருவரும் மறுநாள் திருமணம் செய்ய நினைக்கும் வேளையில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடக்கிறது. காதல் திருமணத்தில் கைகூடியதா என்பதே க்ளைமாக்ஸ்..

எப்போதுமே புன்னகைத்தவாறு வலம் வரும் கதாநாயகன் ஹேமந்த் நடிப்பில் இன்னும் தேறவேண்டும். அல்லது இயக்குனர் அவரிடம் சரியான வேலை வாங்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.. ஆனால் கதாநாயகி அவந்திகாவின் புன்னகையும் கண்களும் அவரை பாஸ்மார்க் வாங்கவைத்து விடுகின்றன.

நாயகனின் நண்பனாக வரும் சடையன் கதாபாத்திரத்தம் முழுப்படத்திற்கும் பயணித்து சில இடங்களில் சிரிப்பை வரவழைத்தாலும், பல இடங்களில் எரிச்சலை ஊட்டவே செய்கிறது. அவரது ட்விஸ்ட்டும் எதிர்பார்த்த ஒன்றுதான். அதுசரி.. எந்த ஊரில் இருக்கிறார்கள் இப்படி காமெடி செய்யும் சீரியஸ் தாதாக்கள்..?

ராம்ஜீவன் இசையில் “ஆலமரம் காத்தாட” பாடல் மட்டும் நம்மை முணுமுணுக்க வைக்கிறது. ஆலமரத்தில் பேய் இருப்பதாக காட்டப்படும் ஆரம்ப பத்து நிமிட காட்சிகள் தவிர அதற்கப்புறம் படமெங்குமே அதன் தடயத்தை காணோமே.. பேய்ப்படம் எடுக்க நினைத்து இயக்குனர் துரைசிங் போகப்போக தடம் மாறியது ஏனோ.. அவருக்கே வெளிச்சம்

Comments are closed.