அக்டோபர் இரண்டாவது வாரத்தில் ‘ஆலமரம்’ ரிலீஸ்..!

67

 

சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் திகில் படமான ‘அரண்மனை’யை தொடர்ந்து அடுத்து வெளிவர இருக்கும் படம் தான் ‘ஆலமரம்’. காரணம் சமீபகாலமாக திகில் படங்களுக்கு கோலிவுட்டில் ஏக வரவேற்பு கிடைத்து வருகிறது.

பாக்யராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.என்.துரைசிங் இந்தப்படத்திnன் மூலம் இயக்குனராகஅறிமுகமாக உள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக புதுமுகம் ஹேமந்த் நடிக்க, மலையாளத்தை சேர்ந்த அவந்திகா மோகன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

“பொதுவாக திகில் படங்களில் வரும் வழக்கமான அம்சங்கள் எதுவும் என் படத்தில் இருக்காது. நம் மண்ணின் மனம் சார்ந்த ஒரு காதல் கதையைதான் நான் திகில் கலந்து சொல்லி இருக்கேன்” என்கிறார் இயக்குனர் துரைசிங். புதிய இசை அமைப்பாளர் ராம்ஜீவன்   இசையில் உருவாகியுள்ள இந்த ‘ஆலமரம்’  அக்டோபர் மாதம்இரண்டாவது வாரத்தில் வெளிவர தயாராக உள்ளது.

Comments are closed.