
தமிழில் ‘அஞ்சாதே’ படம் மூலம் பிரபலமானவர் அஜ்மல்.. மேலும் தமிழில், ‘திருதிரு துறுதுறு’ மற்றும் ‘கோ என நல்லபடங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் ஒரு வெற்றிகரமான நடிகராக வளருவார் என எதிர்பார்த்தபோது வெற்றிச்செல்வன், கருப்பம்பட்டி ஆகிய படங்களில் சறுக்கினார்.
கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி நடித்துவரும் அஜ்மல் மோகன்லாலுடன் நடித்த லோஹம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தொடர்ந்து அஜ்மல் தற்போது நடித்துள்ள படம் தான் ‘மெல்ல திறந்தது மனசு’. தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கியுள்ள இந்தப்படம் முதலில் தெலுங்கில் எடுக்கப்பட்டு பின்னர் தமிழுக்கு வருகிறது.
இந்தப்படத்தில் அஜ்மல் அப்பாவி கிராமத்து இளைஞனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிகிதா நாராயண் நடிக்கிறா. இதில் அஜ்மலின் திருமணத்திற்காக பெண் தேடும்போது, சாமியார் ஒருவர் அஜ்மலுக்கு ஆறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை கூறுகிறார். அதன்பின் அந்தப்பெண் யாரென்று தேடிக்கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதையாம்.
Comments are closed.