
பப்ளிமாஸ் உருவத்தில் அனுஷ்கா ஓடிவரும் ‘இஞ்சி இடுப்பழகி’ பட போஸ்டரை பார்த்து ஜெர்க் அடித்து கிடக்கின்றனர் ரசிகர்கள்.. உண்மையிலேயே யோகா டீச்சரான அனுஷ்கா இதை எப்படி சாத்தியமாக்கினார்.. இனி எப்படி மீண்டும் உடம்பை குறைக்கப்போகிறார் என்கிற பதைபதைப்பு நமக்கும் ஏற்படாமல் இல்லை.
சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் டீசரில் அனுஷ்காவின் உருவத்தையும் குண்டான அவரது நடவடிக்கைகளையும் பார்க்கும்போது படத்தின்மீது இயல்பாகவே ஆர்வம் தோன்றுவது உண்மை.. இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை வரும் செப்-6ஆம் தேதி நடத்த உள்ளார்கள்.
தவிர இன்னுமொரு சுவாரஸ்யமான செய்தி, இந்தப்படத்தில் தேவர்மகன் பட பாடலான ‘இஞ்சி இடுப்பழகி’ பாடலையும் டைமிங்காக சேர்த்துள்ளார்கள்.. அனுஷ்காவும் ஆர்யாவும் டிவி பார்க்கும்போது அதில் கமலும் ரேவதியும் பாடும் ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் ஓடுவதாகவும் அதை பார்த்ததும், இவர்களும் அந்த பாடலை பாடுவதாக கற்பனை உலகிற்கு தாவுவதாகவும் பாடலை படமாக்கியிருக்கிறார்களாம்.
Comments are closed.