‘ஆரம்பம்’ படம் பற்றிய லேட்ட்ஸ்டான இரண்டு செய்திகள். ஒன்று படத்திற்கு தணிக்கைக்குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இது உறுதிப்படுத்தப்பட்ட செய்தி. இன்னொன்று இந்தப்படத்தில் அஜீத்திற்கு இரண்டு முகங்கள்.. இப்போது நாம் பார்ப்பதெல்லாம் பூப்பாதையில் அஜீத் ஆடும் கபடி ஆட்டத்தைத்தான். நமக்கு தெரியாத, சிங்கப்பாதையில் அஜீத் ஆடும் மங்காத்தா ஆட்டமும் படத்தில் இருக்கிறதாம். ஆனால் இது இயக்குனரால் இதுவரை உறுதிப்படுத்தப்படாத, ஆனால் காற்றுவாக்கில் கசிந்த செய்தி தான்.
‘மங்காத்தா’ படத்தைப்போல இதிலும் ஒரு வில்லன் ஆட்டம் ஆடுகிறாராம் அஜீத். ஆனால் தியேட்டர்களில் படம் ரிலீஸாகும் வரை ரசிகர்களுக்கு இந்த விஷயத்தை வெளிப்படுத்தாமல் சஸ்பென்ஸாகவே வைத்திருக்க முடிவு செய்திருக்கிறாராம் இயக்குனர் விஷ்ணுவர்தன். ‘ஆரம்பம்’ படம் வெளியானல் இன்னும் எத்தனை மர்ம முடிச்சுக்கள் அவிழுமோ தெரியவில்லை.