மாமியாரின் குறுக்கீட்டால் ஐஸ்வர்யா ராய் அப்செட்?

66

அன்பான கணவன், அழகான குழந்தை என அருமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராய். அதேபோல தனது மாமனார் அமிதாப் பச்சனுடனும் மாமியார் ஜெயா பச்சனுடனும் ஒருவித பாசப்பிணைப்புடன் தான் இருந்துவருகிறார் இந்த முன்னாள் உலக அழகி.

ஆனால் சமீபகாலமாக அவர் தனது கணவர் குழந்தையுடன் தனிவீடு பார்த்துச் செல்வதில் மும்முரமாக இருக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. காரணம் ஒவ்வொரு விஷயத்திலும் அவரது மாமியாரின் தலையீடு இருப்பதாகவும் அதை ஐஸ்வர்யா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த ஒரு விருந்தின்போது அதில் கலந்துகொண்ட ஐஸ்வர்யாவை, பத்திரிக்கை நிருபர் ஒருவர் பெயர் சொல்லி அழைத்திருக்கிறார். இதை ஐஸ்வர்யா பெரிதாக எடுத்துக்கொள்ளவிலை. ஆனால் அவரது மாமியார் ஜெயா பச்சன் அந்த நிருபரை அழைத்து சத்தம் போட்டாராம். இதுபோன்ற தலையீடுகள் தான் அவருக்கு தலைவலியை ஏற்படுத்தி வருவதாக இதற்கு உதாரணம் சொல்கின்றனர்.

மேலும் ஜெயா பச்சன் தனது மகன் அபிஷேக் பச்சனின் தொழில் பற்றிய விபரங்கள் தனக்கு தெரிந்திருக்கவேண்டும் என்று நினைப்பதுபோலவே ஐஸ்வர்யாவின் தொழில்பற்றிய விபரங்கள், வரவு செலவுகளும் தன் கவனத்துக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறாராம். இதுவும் ஐஸ்வர்யாவுக்கு மனக்கசப்பையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் சொல்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.