கடந்தவருடம் வெளியான நகைச்சுவை படங்ளிலேயே குறிப்பிடத்தக்க படம் என்றால் ‘கலகலப்பு’ படத்தை தாராளமாக சொல்லலாம். சுந்தர்.சி இயக்கத்தில் அவரது அக்மார்க் ட்ரேட் காமெடியுடன் வெளிவந்த இந்தப்படத்தில் விமல், சிவா இருவரும் கதாநாயகர்களாக நடித்திருந்தனர்.
அடுத்ததாக இப்போது ‘கலகலப்பு-2’ தயாராக இருக்கிறது. இந்தப்படத்தில் சிவா நடிப்பது உறுதியாகிவிட்டது. ‘அரண்மனை’ படத்தில் பிஸியாக இருக்கும் சுந்தர்.சி அதை முடித்துவிட்டு ‘கலகலப்பு-2’வை இயக்குகிறார். இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படுமாம்.
இதுமட்டுமல்லாமல் தற்போது த்ரிலோக் என்கிற புதியவர் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார் சிவா. பல காமெடிக்கதைகளை கேட்ட சிவா த்ரிலோக் சொன்ன கதையில் சில புது விஷயஙகள் இருக்கவே அந்தக்கதையில் ஈர்க்கப்பட்டு இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டராம்.