‘கடல்’ படத்திற்குப்பின் மணிரத்னம் தான் இயக்கவிருக்கும் புதிய படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்துவிட்டார் என்றும் தனது படத்தில் ஹீரோவாக தெலுங்கு சினிமாவின் முடிசூடா இளவரசன் மகேஷ்பாபுவை நடிக்க வைப்பதற்காக பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் முன்பே கூறியிருந்தோம்.
தற்போது இன்னொரு பக்கம் நாகார்ஜூனாவுடனும் மணிரத்னம் பேசிவருகிறாராம். கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யாராயிடம் கேட்டுள்ளாராம். ஆனால் ஐஸ்வர்யாராயோ குழந்தை பிறந்தபின் படங்களில் நடிப்பதில்லை என ஒதுங்கியிருப்பதோடு தன்னைத்தேடி வரும் வாய்ப்புகளையும் மறுத்து வருகிறார்.
இருந்தாலும் ‘இருவர்’ படத்தின் மூலம் தன்னை திரையுலகிற்கு அழைத்துவந்த ஆசான் என்பதால் மணிரத்னம் படத்தில் நடிக்க அவர் மறுப்பேதும் சொல்லமாட்டார் என்றும் சிலர் லாஜிக் சொல்கிறார்கள்.