முழுக்க முழுக்க மலேசியாவிலேயே தயாராகிவரும் தமிழ்ப்படங்களின் பட்டியலில் இப்போது லேட்டஸ்டாக இடம்பிடித்திருக்கும் படம் ‘3 ஜீனியஸ்’. மூன்று புத்திசாலியான குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்தப்படத்தில் விஞ்ஞானியாக நடிக்கிறார் நம்ம பாக்யராஜ்.
இந்தப்படத்தில் அணு அறிவியல் மற்றும் நானோ டெக்னாலஜியை எப்படி மனிதவள மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என்பது சம்பந்தமாக ஆராய்ச்சி செய்வதோடு குழந்தைகளிடம் மறைந்துகிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரும் விஞ்ஞானியின் வேடம் தான் பாக்யராஜுக்கு. தற்போது மலேசியாவின் முக்கியமான லொக்கேஷன்களில் இந்தப்படம் படமாக்கப்பட்டு வருகிறது.