ஸ்ரீராமரின் அவதாரம் பற்றியா ’ராம்’ படம் எடுத்தார் அமீர்?

203

 

கடந்த செப்-2 ஆம் தேதி, நடைபெற்ற  ‘திலகர்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ஏன் தான் கலந்துகொண்டோமோ என நொந்துகொள்ளும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார் இயக்குனர் அமீர்.. ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களை நாய் செயின் போல அடையாள அட்டை கட்டியவர்கள்” என இந்த விழாவில் பேசியதால்சில நாட்களுக்கு முன்புதான் அவர்களின் கண்டனத்துக்கு ஆளாகினார்.

அன்று அதே விழாவில் பேசிய இன்னொரு பேச்சு சம்பந்தப்பட்ட படத்தி இயக்குனர் பெருமாள் பிள்ளையையே புண்படுத்திவிட்டது.. “இந்தப் படத்தின் போஸ்டர்கள் பார்த்த போது அதிர்ந்துவிட்டேன்.  ‘திலகர்’ என்று போட்டு கையில் அரிவாளுடன் நிற்பது போலிருந்தது. ‘திலகர்’ என்று போட்டு படத்தை சாந்தமாகப் போட்டிருக்கலாம்.

எனக்குத் தெரிந்து மதுரை ஆழ்வார் நகரில் காந்தி என்றொருவர் இருந்தார். அவர் சாராயம் காய்ச்சுவார். கரிமேட்டில் இன்னொரு காந்தி இருந்தார். அவர்  கட்டை பஞ்சாயத்து செய்வார். இன்னொரு செட்டியார் குடும்பத்தில் ஒருவர்  தன் பிள்ளைகளுக்கு திலகர், கோகலே என்றுபெயர் வைத்தார். அந்த திலகர் ஒயின்ஷாப்பில் கணக்கு வைக்கிற அளவுக்கு குடிகாரர்.

தலைவர்கள் பெயரை வைக்கிறவர்கள் எல்லாம் இப்படி இருக்கிறார்களே என்று நினைப்பேன். எனவே தலைவர் பெயரைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாகப் பயன்படுத்த வேண்டும்” – இதுதான் அமீர் அன்று விழாவில் பேசியது.. இதுதான் படத்தின் இயக்குனரை காயப்படுத்திவிட்டது.

மேடையில் கடைசியில் பேசியது அமீர்தான். நடுவில்  எவ்வளவோ நேரம் இருந்தது. அங்கிருந்த என்னை அருகினில் அழைத்து கதை எதைப்பற்றியது? ஏன் திலகர் என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளீர்கள் என்று கேட்டிருந்தால் நான் விளக்கம் அளித்திருப்பேன். திலகர் படத்தின் கதையையோஅல்லது அதில்சொல்லப்பட்டிருக்கும் கருத்தையோ தெரிந்து கொள்ளாமல் ‘திலகர்’ கையில் அரிவாளை கொடுத்து இருப்பது மாபெரும்  தவறு என்ற ரீதியில் உபதேசம் செய்து என்னையும், என் சார்ந்த பலரையும் வெகுவாகப் புண்படுத்திவிட்டார்..

அன்பு, விட்டுக் கொடுத்தல் போன்ற மேலான பண்புகளை வலியுறுத்தும் கருத்துகளையும் காட்சிகளையும் கொண்டதே ‘திலகர்’ திரைப்படத்தின் கதை. எதையும்  தெரிந்து கொண்டு எந்த கருத்தையும் சொல்ல வேண்டுமே தவிர  அவசரக்கோலத்தில் வார்த்தைகளை அள்ளி வீசுவது அமீர் போன்ற பெரிய இயக்குநருக்கு அழகல்ல.

மற்றவர்களின் படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பேசுவதை விட தாம் எடுக்கும் படங்கள் மூலம் வழிகாட்டினாலே போதுமே.  ‘ராம்’ படத்தில் ஸ்ரீராமரின் அவதாரம் பற்றியும், ‘ஆதிபகவன்’ படத்தில் திருக்குறள் சிந்தனைகள் பற்றியுமா திரு அமீர் அவர்கள் படமாக்கியிருந்தார்? தனக்கொரு நீதி, பிறர்க்கு ஒரு நீதி என்பது எந்த வகையில் சேர்த்தி என்பதை  அமீர் சொல்ல வேண்டும்” என தன் மனக்குமுறலை கொட்டியுள்ளார் திலகர் படத்தின் இயக்குனர் பெருமாள் பிள்ளை.

Comments are closed.