தேனாண்டாள் உதவியுடன் ‘அரண்மனை’ கதவை திறக்கிறார் உதயநிதி..!

78

 

செப்டம்பர்-19ஆம் தேதி சுந்தர்.சியின் ‘அரண்மனை’ வாசல் திறக்கப்பட இருக்கிறது. அரண்மனை வாசலை பார்த்தவாறு நமக்கு முதுகை காட்டியபடி அமர்ந்திருப்பது ஹன்சிகாவா, ஆன்ட்ரியாவா, லட்சுமிராயா என்கிற சஸ்பென்ஸுக்கான விடை இன்னும் நான்கு நாட்களில் தெரிந்துவிடும்.

 

விஷன் ஐ மீடியா நிறுவனம் தயாரித்த இந்தப்படத்தை தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலமாக வெளியிடுகிறார் உதயநிதி. பரத்வாஜ் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் கதாநாயகர்களாக சுந்தர்.சியும் வினய்யும் நடிக்க முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் சந்தானம்.

Comments are closed.