‘அண்டாவ காணோம்’ ; அலறுது தேனி..!

82

 

‘திமிரு’ படத்துல ‘ஏலேய் மாப்புள’ என ரவுடித்தனம் பண்ணிய ஸ்ரேயா ரெட்டியை மறந்திருக்க மாட்டீர்கள் தானே… விஷாலின் அண்ணியாகிவிட்ட இவர் பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.. கதாநாயகியாக அல்ல என்றாலும் கதையின் நாயகியாக என்பதில் அம்மணிக்கு மகிழ்ச்சி..

படத்தின் பெயர் என்ன தெரியுமா..? ‘அண்டாவ காணோம்’. ஏற்கனவே பேமஸ் ஆன கிணத்த காணோம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் வரிசையில அடுத்து இடம்பெறப்போகுது இந்த ‘அண்டாவ காணோம்’. தேனியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கிராமத்தில் சின்ன பொருள் ஒன்று காணாமல் போனாலே அமர்க்களப்படும்.. ஒரு அண்டா காணாமல் போனால் அலறாதா பின்னே.. இதைவைத்துத்தான் இரண்டு மணிநேர கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வடிவேல். இவர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். படத்தின் கதாநாயகனாக நடிப்பவர் விஜய் டிவி புகழ் தீபக்.

Comments are closed.