எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கையில் ஒரு மோசமான நாள் வரும் அந்த நாள் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப்போடும். அப்படிப்பட்ட மோசமான நாள் அமீர்(விதார்த்) என்பருக்கு வருகிறது. சிக்கிமில் கல்லூரி பேராசிரியராக நிம்மதியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அமீர் தன் குடும்பத்தை சந்திக்க சென்னை வருகிறார்.
ஆனால் விமான நிலையத்திலேயே அமீரை முகம் தெரியாயாத ஒருவன் பிளாக்மெயில் செய்து தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறான். அமீரின் கையில் ஒரு மொபைல்போன் மட்டும் கொடுக்கப்படுகிறது.. உத்தரவுகள் அனைத்தும் மொபைல் போனிலேயே வருகிறது.
அவன் பிடியில் உள்ள தன குடும்பத்தை காப்பற்ற, பின்விளைவு என்ன என்பதை அறியாமலேயே, அவன் சொல்லும் வேலைகளை வேறு வழியின்றி செய்கிறார் அமீர். அந்த முகம் தெரியாத நபர் அமீரை வைத்தே ஒரு அதிபயங்கர திட்டத்தை செயல்படுத்த முயல்கிறான். அதை சாதாரண மனிதனான அமீர் முடிக்கிறாரா இல்லை முறியடிக்கிறாரா என்பதுதான் ‘ஆள்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ்..
விதார்த்திற்கு இது முற்றிலும் மாறுபட்ட படம்.. பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விதார்த். க்ளைமாக்ஸில் குடும்பமா, தேசமா என அவர் முடிவெடுக்கும் கட்டத்தில் உண்மையிலேயே நம் கண்களை பணிக்க வைத்துவிடுகிறார்.
அவர் சந்திக்கும் ஆட்கள் ஒவ்வொருவரும் காட்டும் வில்லத்தனமும் அந்த நெட்வொர்க்கும் நம்மை பிரமிக்கவைக்கிறது. கதாநாயகி ஹார்த்திகாவுக்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை.. ஒளிப்பதிவாளர் உதயகுமார், இசையமைப்பாளர் ஜோஹன், படத்தொகுப்பாளர் ரமேஷ் பாரதி மூவரும் படத்தை விறுவிறுப்பாக உதவி இருக்கிறார்கள்..
இறுதிவரை கதாநாயகனும் வில்லனும் சந்தித்துக்கொள்ளாமலேயே திரைக்கதையை விறுவிறுப்பாக பின்னியிருக்கிறார் இயக்குநர் ஆனந் கிருஷ்ணா. உண்மையான இஸ்லாமியன் மக்களையும் நம் இந்திய தேசத்தையும் தான் நேசிப்பான் என்கிற தேசிய ஒருமைபாட்டையும், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒன்று.
Comments are closed.