‘பீட்டா’ வெளியேற வேண்டும் ; ஜல்லிக்கட்டுக்கு விஜய் ஆதரவு..!

271

Vijay-jallikkattu

தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டை நடத்திய ஆகவேண்டும் என போராடி வருபவர்களின் ஒட்டுமொத்த எதிரியாக பார்க்கப்படுவது பீட்டா என்கிற வெளிநாட்டு அமைப்புதான்.. எங்கோ சிலர் உட்கார்ந்து உருவாக்கிய இந்த அமைப்பு, தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுடன் விளையாடி அவர்களை வெறியேற்றிக்கொண்டு இருக்கிறது..

தொடர்ந்து பீட்டாவுக்கு எதிரான எதிர்ப்பு அதிகமாகிக்கொண்டே வரும் இந்தநிலையில், இத்தனை நாட்களாக மௌனம் காத்துவந்த விஜய் மௌனம் கலைத்துள்ளார்.. தனது ட்விட்டர் மூலமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்துள்ள நடிகர் விஜய், பீட்டா அமைப்பு இங்கிருந்து வெளியேற்றப்படவேண்டும்.. போராட்டத்தில் கைதான மாணவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என குரல் கொடுத்துள்ளார்.

Comments are closed.