பிரமிக்க வைக்கும் கௌதம் மேனனின் வேகம்..!

272

dhruva natchathiram 1

தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தொட்ட படம் இன்னும் நிறைவுறாத நிலையிலேயே விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை ஆரம்பித்துவிட்டதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் இயக்குனர் கௌதம் மேனன்.. பொதுவாக படம் ஆரம்பிக்கப்பட்டு முக்கால்வாசி படப்பிடிப்போ அல்லது போஸ்ட் புரடக்சன் பணிகளோ முடிவடைந்தபின் தான் டீசர் அல்லது ட்ரெய்லர் வெளியிடுவது வழக்கம்..

ஆனால் கௌதம் மேனனோ பட அறிவிப்பை வெளியிட்ட சில நாட்களிலேயே ‘துருவ நட்சத்திரம்’ பத்திற்கான டீசரை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.. அதிலும் மற்றவர்கள் எல்லாம் ஒரு நிமிடத்துக்கு குறைவான நேரம் கொண்ட டீசர்களை வெளியிட்டு வரும் வேளையில் இவர் சுமார் மூன்று நிமிடங்கள் ஓடும் அளவுக்கு விரிவான, மிரட்டாலான மேக்கிங்குடன் டீசரை வெளியிட்டுள்ளது இன்னும் ஆச்சர்யம் தருகிறது. மொத்தத்தில் கௌதம் மேனனின் வேகம் பிரமிக்கவே வைக்கிறது.

Comments are closed.