“ஜல்லிக்கட்டு விரைவில் நடைபெறும்” ; போராட்ட இளைஞர்களை உற்சாகப்படுத்திய சூர்யா..!

221

surya-jallikkattu

தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்களும் பொதுமக்களும் தன்னெழுச்சி போராட்டம் நடத்தி வருகின்றனர்.. திரையுலகை சேர்ந்த ஒரு சில கருங்காலிகளை தவிர மற்றவர்கள் அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து அறிவித்து வருகின்றனர்.. அந்தவகையில், ஜல்லிக்கட்தையும் அதற்காக போராடும் இழிஞர்களின் போராட்டத்தையும் ஆதரித்து குரல் கொடுத்துள்ளார் சூர்யா. அதன் சாராம்சம் இதுதான்….

இப்போது சாதாரண மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் தங்களின் பண்பாடு, அடையாளம், வரலாறு குறித்து பேசுவதற்கு காரணமாக ஜல்லிக்கட்டு மாறி இருக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கி பொதுப் பிரச்னைகளுக்கு இளைஞர்களை ஒன்றுகூடி போராட தூண்டிய அனைவருக்கும் நன்றிகள். தன்னெழுச்சியான போராட்டங்களில் எப்போதுமே உண்மை இருக்கும்.

பல நூற்றாண்டுகளாக தமிழகத்தில் நடந்து வருகிற ஜல்லிக்கட்டு, மாடுகளுக்கு எதிரானது என்று பொய்ப்பிரச்சாரம் செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற பீட்டா அமைப்பு மக்கள் மன்றத்தில் தோற்றிருக்கிறது. நாட்டு மாடு இனம் அழிவதற்கு துணை போகிறவர்கள் ஜல்லிக்கட்டு மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

சட்டமும் ஆட்சியும் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை. நமது விரல் எடுத்து நமது கண்களைக் குத்திக் கிழிக்கிற முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வும் எதிரொலிக்கிறது. அமைதியான வழியில் நமது உரிமைகள் நிலைநாட்ட போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்.

மக்களின் போராட்டம் வெற்றிபெற்று ஜல்லிக்கட்டு விரைவில் நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஜல்லிக்கட்டு நடைபெற்றதும் நமது போராட்டம் வெற்றிபெற்றதாக நினைத்து அமைதியாகிவிடக்கூடாது. நமது பண்பாட்டையும், அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகள் வேறு எந்த வடிவில் வந்தாலும் இதேபோல் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்”

என கூறியுள்ளார்.. சூர்யாவின் இந்த ஆதரவுக்குரல் போராட்டக்களத்தில் நிற்கும் இளைஞர்களை இன்னும் உற்சாகப்படுத்தியுள்ளது..

Comments are closed.