
தமிழ்ப்புத்தாண்டு தினமான நேற்று விஜய் நடித்த ‘தெறி’ படம் கோலாகலமாக ரிலீஸாகியது.. பக்கத்து மாநிலமான கேரளாவில் ‘தெறி’ படம் ரிலீசாவதை முன்னிட்டு எந்த மலையாள படமும் ரிலீசாகவில்லை என்றால் ‘தெறி’யின் வீரியம் எந்த அளவுக்கு இருந்தது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.. ஆனால் இங்கே நம் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு விநியோக ஏரியாவுக்கு உட்பட்ட சுமார் 60 தியேட்டர்களில் ‘தெறி’ படம் ரிலீசாகாததால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கு காரணம் ‘தெறி’ படத்துக்கான செங்கல்பட்டு ஏரியா உரிமை அதிக விலை சொல்லப்பட்டதால் விநியோகஸ்தர்கள் வாங்க மறுத்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.. ஆனால் இது குறித்து விளக்கம் கூறியுள்ள தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, “கோடிகளில் பணம் போட்டு படத்தை எடுக்கிறோம்.. ஆனால் விநியோகஸ்தர்களோ அல்லது தியேட்டர் அதிபர்களோ அல்லாத ஒருசிலர் பணத்தை குறிவைத்து இந்த காரியத்தை செய்துள்ளனர்” என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ‘தெறி’ படத்தை வெளியிடாத 60 தியேட்டர்களுக்கு இனி தயாரிப்பாளர்கள் தரப்பில் எந்த ஒத்துழைப்பும் அளிப்பதில்லை என முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், தியேட்டர் அதிபர்கள் பலரிடம் நேரிடையாகவே பேசி ‘தெறி’ படத்தை ரிலீஸ் செய்ய துரித நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தாணு கூறியுள்ளார்.
Comments are closed.