
தமிழில் தனது இரண்டாவது படத்திலேயே ரஜினியுடன் நடித்துவிட்ட நயன்தாராவுக்கு இன்னும் கமலுடன் சேர்ந்து நடிக்க முடியாமல் இருப்பது ஒருவகையில் வருத்தம் கலந்த சாதனை என்றுகூட சொல்லலாம்.. இப்படித்தான் சிம்ரன் கூட தனது ‘பீக்’ டைமில் கமல், ரஜினி யாருடனும் நடிக்காமல் இருந்துவிட்டு பீல்டு அவுட் ஆகிற சமயத்தில் கமலுடன் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
அந்தவகையில் நயன்தாராவும் பின்னாளில் கமலுடன் நடிப்பாரோ என்னவோ, இப்போதைக்கு கமல் படத்தின் டைட்டிலில் உருவாகிவரும் படத்தில் நடித்துவருகிறார் என்பதே கமல் ரசிகர்களுக்கு ஓரளவு ஆசுவாசம் அளிக்கும் செய்தி. ஆம் முப்பது வருடங்களுக்கு முன் பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தின் டைட்டிலைத்தான் தற்போது சற்குணம் தயாரிப்பில் தாஸ் ராமசாமி என்பவர் இயக்கத்தில் நயன்தாரா நடித்துவரும் படத்திற்கு டைட்டிலாக வைத்துள்ளார்கள். மற்றபடி இரண்டு படாத்துகும் எந்த சம்பந்தமும் இல்லை.
Comments are closed.